பைரவர்

ஒவ்வொரு சிவன் கோவிலிலும்வடகிழக்கு பகுதியில் தனிச்சந்நிதியில் கால பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன்பைரவர்சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. கால பைரவர் பாம்பை பூணூலாகக் கொண்டுசந்திரனை சிரசில் வைத்துசூலம்மழுபாசம்தண்டம் ஏந்தி காட்சி தருவார்.

பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி சூன்யம்திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. எமபயம் தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்பு பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.

சனி பகவானின் குரு பைரவர் அவருடைய சந்நிதியில் 19 மிளகு அல்லது அவரவர் வயதுக்கேற்ற எண்ணிக்கையில் மிளகைப் புதுத்துணியில் கட்டி மண் கிளியாஞ்சட்டி விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமாக ஏற்றவும் ஏழரைச்சனியின் தாக்கம் குறையும்

பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?