திருமணம்
சாதாரணமாக சனி திசை, ஏழரை சனி என இரண்டும் நடக்கும் போது திருமணத்தை தவிர்க்கலாம். அடுத்து ஏழரைச் சனி நடக்கும் போது இராகு திசை நடந்தாலும் தவிர்க்கலாம். இதேபோல, ஏழரைச் சனி நடக்கும் போது கேது திசை நடந்தாலும் திருமணத்தை தவிர்க்கலாம், ஏழரைச்சனியின் இக்காலத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தாலும் சேதங்கள் ஏற்படலாம்.இதெல்லாம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஒரு த்ரில்லிங்காக இருக்கக்கூடிய காலகட்டம். எப்ப வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தலைக்கு மேலே கத்தி இருப்பது போன்ற காலகட்டம்
திருஞான சம்பந்தர்
அருளிய பதிகங்களில் , நமது இன்றைய வாழ்க்கை சூழலில் மிக மிக பயனுள்ள ஒரு பதிகம் - இந்த கோளறு பதிகம். ஈசனை
மனதில் தியானித்து , அனுதினமும் இதைப் பாடி வர , நமது ஜாதகங்களில்
உள்ள குறைபாடுகளும், கோசார ரீதியாக நவ கிரகங்களால் எந்த தீய பலன்கள் நிகழாமலும் , நம்மை பாதுகாக்கும் கவசம் - இந்த பதிகம்.