ஜோதிட சூட்சமம்-கர்ம வினை
கர்ம வினையை அனுபவிக்கவே பூமியில் ஜென்மம் எடுத்து
பிறந்து உள்ளோம் இந்த ஜென்மம் பூர்வஜென்ம (ஐந்தாம் இடம்) பாக்கியத்தால்
(ஒன்பதாம் இடம்) ஆனது அந்த பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே கரு ஸ்தானமாகவும்
கர்ப்ப ஸ்தானமாகவும் அமைகிறது அந்த பாக்கியத்தால் கருதரித்து கர்ம வினைகளுக்கு
ஏற்ப கரு வளர்ந்து வினைகளுக்கு ஏற்ப கிரகங்கள் இருக்கும்போது கர்ப்பசெல் நீக்கி
லக்கனம் அமைந்து ஜென்மமாய் பிறக்கிறோம்
பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும், அவரவர்
பூர்வ ஜென்ம வினைகளே, ஒன்பது கிரகங்களாக மாறி, ஐாதக
கட்டங்களில் அமர்கிறது அவரவர் வினைகளே வீடுகளையும்
தீர்மானிக்கிறது.
அவரவர் வினைகளே கிரகங்களாக மாறி
இல்லங்களில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம்
மூலம் நம்மை நம் வினைகளுக்கு ஏற்றபடி வழாவைக்கிறது நம் பூர்வஜென்ம புண்ணிய
பாக்கியமே ஏழரைச்சனியாக, அட்டமச்சனியாக, அர்த்தாஷ்டமச்சனியாக, ஒன்பது
கிரகங்களின் யோகதெசையாக, அவயோகதெசையாக, யோகங்களாக, அவயோகங்களாக மாறிவருகிறது
உதரணமாக ராகு தசை ஒருவரை முட்டாலாகவும், மூடனாகவும், முரடனாகவும் கள்ளனாகவும்
வாழவைக்கிறது அதே தசை வேறு ஒருவருக்கு வரும்போது மகானாகவும், மந்திரியாகவும்,
சாதுவாகவும், பணக்காரராகவும் வாழவைக்கிறது இதற்கு காரணமும் நம் பூர்வஜென்ம
புண்ணியம்தான் எந்த ஒரு கிரகங்களாக இருந்தாலும் அதன் சாரத்தால் தன்மை
மாறிவிடுகிறது இந்த சாரத்தை மாற்றக்கூடிய வலிமை சித்தர்களுக்கும் மட்டும்தான்
உண்டு,
ஒன்பது கிரகங்களை கண்டவர்களும் சித்தர்கள்தான், அதன்
தன்மையை மாற்றக்கூடி வலிமையும் சித்தர்களுக்கு மட்டும்தான் உண்டு, நம் தலைவிதியை
மாற்றக்கூடி வலிமையும் சித்தர்களால் மட்டும்தான் முடியும் எனவே நம்பிக்கையோடு
சரநாகதி அடையுங்கள்.
|