ஜோதிட விளக்கங்கள்
பிரசவம் பார்க்க போனவர் டைவர்ஸ் கேட்டு கணவனுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார் இது எதனால், பாசமோடு வாழ்ந்த குடும்பங்கள் ஊரார் பார்க்க சண்டைகள் போட்டுகொண்டு பாகபிரிவினைக்கு சென்றுவிடுகிறார்கள் இது எதனால், தன் மகளை பாசத்தோடு வளர்த்து என்ன கேட்டாலும் தட்டாமல் வாங்கிகொடுத்து வளர்த்த மகள், படிக்கும்போது கூட படிக்கும் மாணவனுடனோ, சொல்லி கொடுக்கும் ஆசிரியரோடோ அல்லது எதிர்வீட்டு பையனோடோ இப்படி முறைமாறி காதலித்து அவன்தான் வேண்டும் என்று மல்லுக்கட்டி ஓடுவதும் நீதிமன்றம் வரை சென்று குடும்பத்தை கேவலபடுத்துவதும், பின்னால் வழாவெட்டியாக வீட்டில் வந்து சேர்வதும் எதனால், சில ஒவ்வாத திசை சந்தியில் குடும்பமே சிதறி சின்னா பின்னமாக நிற்கும் பெற்ற தாய், தந்தை, நான் என்ன பாவம் செய்தேனோ என்று அழுது புலம்ப வைத்துவிடும் நன்றாக படித்து கொண்டு இருந்த பிள்ளை இனி பள்ளிக்கு போகாமட்டேன் என்று மல்லுக்கு நிற்பதும் கூடாத நட்பால் புத்தி கெட்டு அலைவதும், போதைக்கு அடிமை ஆகி நிற்பதும் எதனால் கல்லூரிக்கு படிக்கச் சென்று பாய் பிரண்டுடன் ஊர் சுற்றி போதைக்கு அடிமையாகி வாழ்கையை தொலைத்து நிர்மூலமாய் நிற்பதும் எதனால், பல குடும்பங்கள் வெளியே சொல்லிக்கொள்ள முடியாத வேதனையில் நிற்கிறார்கள், பெற்றோர்களே நல்ல ஜோதிடருக்கு முக்காலத்தையும் கணிக்ககூடிய சக்தி உண்டு, தங்கள் குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடம் பார்த்து குடும்பத்தை பற்றியும் திசை சந்தி பற்றியும் மகன் மகள் பற்றியும் எதிர்காலத்தில் வரக்கூடிய திசை சந்தி அதனால் ஏற்படும் கெடுபலன்கள் பற்றியும் தெரிந்து கொண்டு அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை பற்றியும் அதற்கான பரிகார முறைகளை தெரிந்து வாழுங்கள் அதை விட்டு விட்டு ஜோதிடரை சோதிக்காதீர்கள் உண்மையை சொல்லி கேளுங்கள் சிலஜோதிடர் உண்மை சட்டென்று சொல்லிவிடுவார்கள் சிலஜோதிடர் எப்படி தங்கள் மகளை அல்லது மகனை பற்றி பெற்றோரிடம் சொல்வது என்று பட்டதும் படாததுமாய் சொல்லுவார்கள் வருடத்துக்கு ஒருமுறையாவது ஜோதிடரை சந்தி்த்து பலன்களை தெரிந்து கொள்ளுங்கள். திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய சித்தரும் ஜோதிடரும் ஆவார். அவர் எழுதிய திருக்குறள் ஒரு மிகப்பெரிய ஜோதிட புத்தகம் ஆகும், ஜோதிடத்தை வெறுப்பவர்கள் திருவள்ளுவரை வணங்கி அவர் சொல்லிய வழியை பின்பற்றுங்கள் எத்தனையோ அரசியல்வாதிகள் திருவள்ளுவ சித்தரை வணங்கி இன்றுவரை சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் |