ஜோதிட விளக்கம்-1
பொதுவாக ஜாதகம் பார்க்கவருபவர்கள் நல்ல படியாக இருக்கும் காலத்தில் வருபவதில்லை அதாவது காரு, பணம், பங்களா, வீடு, வாசல், வேலை, தொழில், உத்தியோகம், பணி ஆட்கள், மனைவி மக்கள், நல்ல பதவி சுகத்தோடு வாழும்போது யாரும் ஜோதிடரை பார்க்க வருவதில்லை, எல்லாம் போன பிறகு அல்லது இழந்த பிறகு வந்து கேட்பார்கள் நான் என்ன செய்யவேண்டும், எப்படி இழந்தேன் என்று தெரியவில்லை, எதாவது பரிகாரம் இருக்கிறதா, ராசிக்கல் அணிந்து கொள்ளலாமா, அல்லது எத்தனையோ பரிகாரம் செய்து விட்டேன் ஒன்றும் வேளைக்கு ஆகவில்லை, மாற்று வழி இருக்கிறதா சொல்லுங்கள் செய்கிறேன் என்று கேட்பார்கள், எப்படி கெட்ட நேரத்தில் நல்ல நேரம் எப்போது வரும் என்று கேட்கிறிர்களோ அது போல நல்ல காலத்தில் இருக்கும் போது எனக்கு எப்போது கஷ்ட காலம் வரும் அதற்கு என்ன மாற்று வழி என்பதை தெரிந்து கொண்டு அதற்கு உண்டான மாற்று வழியை உருவாக்கி அதன் வழி நடந்து கொள்ளவேண்டும்,
ஒரு குடும்பத்தில் சுபகாரியம் செய்யும்போது தான் அவன் விதி ஆரம்பம் ஆகிறது அதன் பிறகுதான் அவன் தன் தலைவிதியை கர்மாவை அனுவபிக்கிறான் அதாவது வீடு, திருமணம், வாகனம், தொழில், இடம், கல்வி, இவைகள் எல்லாம் ஆரம்பிக்கும்போது கண்டிப்பாக ஜோதிடம் அறிந்த, அனுபவம் நிறைந்த நபரிடம் அறிந்து ஆரம்பியுங்கள் இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க வேண்டும், அது போல ராசி பலன் பார்த்து விட்டு கண்டிப்பாக எந்த காரியத்தையும் செய்யக்கூடாது, அது பொது பலனே தவிர உங்களுக்கு உள்ள பலன்கள் இல்லை
மூன்றாவது தசை நீசக்கரகத்தின் தசை நடந்தாலோ அல்லது நான்காவது தசை சனி தசை வர நேர்ந்தாலோ அல்லது ஐந்தாவது தசை செவ்வாய் தசை வர நேர்ந்தாலோ
அல்லது ஆறாவது தசை குருதசை வர நேர்ந்தாலோ அல்லது ஏழாவது தசை இராகு தசை வர நேர்ந்தாலோ அவைகள் விபத்தரா தசை எனப்படும் மாரகம் அல்லது அதற்கு சமமான இழப்புகளையும், அவமானங்களையும், சந்திக்க நேரும். அது போல ஆறு, எட்டு, பனிரெண்டுக்கு உடையவர்கள் தசைகள் நடந்தாலோ கோடிஸ்வரர்களையும், கீழே தள்ளி விட்டு நிர்மூலம் ஆக்கிவிடும், ஒருவருக்கு ஏழரைச்சனியோ, அட்டமச்சனியோ, அர்த்தாஷ்டமசனியோ, கண்டச்சனியோ நடக்கும்போது சந்திரதசை நடந்தால் மிகப்பெரிய இழப்புகளும், சேதங்களும், கண்டங்கள், மற்றும் மரணங்களை கூட ஏற்படுத்தும், அது போல தசை சந்தி ஒரு குடும்பத்தில் வருமேயானால் குடும்பமே சிதறி சின்னா பின்னாமாகிவிடும் அவமானபடுத்தி தெருவில் நிற்கவைத்து கேவலத்திற்கு ஆலக்கிவிடும், தீராத வியாதியை உண்டுபன்னிவிடும்
பூர்வஐென்ம புன்னியம், ஜோதிட சூட்சுமம் பொருத்து மாரகம், இழப்புகளின் பாதி்ப்புகள் மாறுபடும்