ஜோதிட விளக்கம்-2

 முழு சுபக்கிரகமான குரு பகவான் அவர்கள் ராசியையோ அல்லது லக்னத்தையோ பார்த்துவிட்டால் போதும் வாழ்நாள் முழுவதும் எல்லா செயயல்களும் பிரச்சனைகள் இல்லாமல் ஈடேறும், அசுப கிரகங்கள், பாப ஸ்தானங்களில் நின்றால், யோகமான பலன்கலேயே கொடுப்பர், தர்ம, கர்மாதிபதி என்று சொல்லக்கூடிய ஒன்பது, பத்துக்குரியவர்கள் ஒன்று சேர்ந்து நின்றாலோ அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டாலோ மிக அற்புதமான பலன்களை கொடுப்பார்கள் ஒருவேளை திசை சந்தியில் சறுக்கி விழ்ந்தலோ உடனே எழும்பி ஓடக்கூடிய யோகத்தினை கொடுத்துவிடுவார்கள் அதுபோல பரிவர்த்தனை யோகம் பெற்ற ஜாதகர்களுக்கு அபரிவிதமான யோகங்களை அள்ளித் தருவார்கள்.

 பாவதிபதிகள் தங்களுடைய பாவங்களை பார்ப்பது பாவத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும், மறைவிட ஸ்தானமான மூன்று, ஆறு, எட்டு, பனிரெண்டுக்கு உரியவர்கள் சொந்த ஸ்தானங்களில் நின்றாலோ அல்லது ஒருவருக்கு ஒருவர் மாறி நின்றாலோ திடிர் யோகத்தை உண்டுபன்னுவர், இந்த யோகம் தேவ ரகசியமானது, கேந்திராதிபதிகள் திரிகோணத்தில் நின்றாலோ, திரிகோணதிபதிகள் கேந்திரத்தில் நின்றாலோ அற்புதமான, புனிதமான, நீடித்த பெயர்பெறக்கூடிய, புகழ்பெரக்கூடிய யோகங்களை அள்ளித் தருவார்கள், ராசிநாதன் லக்னநாதன் பார்வைக்கு பாவங்கள் போக்கும் தன்மை உண்டு, இவர்கள் அசுப ஸ்தானங்களில் நின்றாலும் கெடுதல் செய்யமாட்டார்கள், விபத்தரா தசை நடக்கும் போது சொந்த தொழில் ஏதும் செய்யக்கூடாது, எந்த விதமான நன்மைகளும் நடைபெறாது, மேலும் எண்ணங்களும் கனவுகளும் ஈடேற வேண்டும் என்றால் ஐந்தாம் இடம் மூலம்தான் ஈடேறும்,

 பொதுவாக ஏழரைச்சனி, அட்டம்ச்சனி,கண்டச்சனி, அர்த்தாஷ்ட்டமச்சனி நடக்கும்போது வரும் பிரச்சனைகள், மாற்றங்கள் சுனாமி போல வந்து செல்லும் அந்த பிரச்சனைகள் ,மாற்றங்கள் அவரவர் பூரவ்ஜென்ம புன்னியத்தை பொறுத்தே, ஏற்றமாகவும், இறக்கமாகவும் அமையலாம் பொதுவாக சனி பகவான் எல்லாரையும் கெடுக்கமாட்டர்கள், தப்பு செய்தவனுக்கு தண்டனையை கொடுப்பார்கள், நிரபராதிகளை விடுதலை செய்வார்கள், பொதுவாக ஜோதிடத்தில் எண்ணற்ற ஜோதிட விதிகள் உள்ளன அவகளை அனுபவத்தில் பார்க்கும்போதுதான் மனதில் பதியும் எனவே கேள்வி பதில் பகுதியில் ஜோதிட விதிகளை கோடிட்டு விளக்கி உள்ளேன் மேலும் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லா ஜோதிட விதிகளும் எல்லா பதிவுகளிலும் இடம் பெற்றுள்ளது


மனது செம்மையானால் மந்திரம் படிக்கவேண்டாம் என்பது பெரியோர் வாக்கு

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?