ஜோதிட விளக்கம்-3

நேரம், காலம் முட்டாளையும் அறிவளியாக்கும், வீரனையும் கோழையாக்கும்
நீசம் என்பது ஒரு நிலை, நீசபங்கம் என்பது ஒரு நிலை, நீசபங்கம் ராஜயோகம் என்பது ஒரு நிலை, நீசனை நீசன் பார்த்தாலும் நீசபங்க ராஜயோகம் ஆகும், அதுபோல நீசம் பெற்ற கிரகத்திற்கு ஐந்து, ஒன்பது என்ற திரிகோனபதிகளின் சம்பந்தம் ஏற்பட்டால் நீசபங்க ராஜயோகம் ஆகும் இதை விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு வேட்பாளர்
லட்சகணக்கில் செலவழித்தும் தேர்தலில் தோற்று விட்டால் அது நீசம் ஆகும். அவரே கடைசி நேரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி வெற்றி வேட்பாளராக அறிவிக்கபட்டால் அது நீசபங்கம் ஆகும், அப்படி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மந்திரி பதவி கிடைத்துவிட்டால் அது நீசபங்கம் ராஜயோகம் ஆகும். அது போல வக்ரம் கிரகம் என்ன செய்யும்? பொதுவாக வக்ரம் ஆன கிரகத்திற்கு உக்ரபலம் என்பார்கள், எடுத்து காட்டாக ஜென்மச்னி நடக்கும் காலத்தில் சனி கிரகம் வக்ரம்  அடைந்தால் மிகுந்த கெடுதலை கொடுக்கும்
எட்டாம் இடம் என்பது கவலை, சஞ்சலம், அபகீர்த்தி, கௌரவப் போராட்டம், விபத்து இவற்றைக் குறிக்கும் லக்கனதுக்கு எட்டாம் பாவம் அஷ்டமஸ்தானம் எனஅழைப்பார்கள் இதை ஆயுள்ஸ்தனம் என்றும் கூறுவார், இந்த பாவத்தை கொண்டு ஜாதகரின் மர்மஸ்தானத்தை பற்றியும் அறியலாம்  ஆயுள் பலம் மற்றும் ஏற்படும் வியாதிகள், மான அவமானங்கள், வேதனைகள் பற்றியும் அறியலாம், மரணம் எங்கு, எப்போது, எப்படி, எந்த நிலையில் அற்படும் என்பதை உணர்த்தவள்ளது, விபத்துகள், வம்பு வழக்கில் சிக்குதல், சிறைத்தண்டனை பெறுதல் அரசாங்க தண்டனை பெறுதல் போன்று தோல்லை தரும் பல விஷயங்களை அறிய உதவும், பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை அறிய உதவும். இந்த பாவாதிபதியை எட்டாம்மதிபதி, அஷ்டமாதிபதி, ஆயுள் ஸ்தானாதிபதி என்றும் கூறுவர் ஜிவசமாதியில் உங்கள் குறைகளை முறையிட்டு அழுங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள் உங்கள் கிரக தோஷமும் வினைப்பயன் தோஷமும் விலகிவிடும்.

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?