கஜகேசரி யோகம்
ஒரு ஜனன ஜாதகத்தில்
சந்திரனுக்கு 1, 4,
7, 10 இடங்களாகிய ஆகிய
கேந்திர ஸ்தானங்களில் குரு நீன்றலோ அல்லது, குருவின்
கேந்திரத்தில் சந்திரன் நின்றாலோ இந்த அமைப்பு
சந்திரனுக்கும், குருவுக்கும் நன்மை பயக்குமிடங்களாகும் இதையே கஜகேசரி யோகம் என்று
கூறுகிறோம் இந்த யோகம் இருந்தால் ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் நீங்கி விடும்
ஒரு ஜாதகர் கஜகேசரி
யோகத்தில் பிறந்துவிட்டால் அந்த குடும்பம் எப்படிப்பட்ட வறுமை
சூழ்நிலையிலிருந்தாலும் அந்த குடும்பத்தை யோகமாக கொண்டு வரும் ஆற்றல் இந்த யோகம்
உள்ள ஜாதகருக்கு உண்டு.
மற்ற யோகங்களை
பொருத்து ஒரு ஊரை ஆளக்கூடியவராகவோ அல்லது கிராமத்தை ஆளக்கூடியவராகவோ, மாநிலத்தை ஆளக்கூடியவராகவோ, அல்லது நாட்டை ஆளக்கூடியவராகவோ இருப்பார்கள்