சந்திராஷ்டமம் என்ன செய்யும்?
கோட்சார ரீதியாக ஜென்மராசிக்கு
எட்டாமிடத்தில் சந்திரன் 2 1/4 நாள்கள் சஞ்சரிக்கும் நாளை சந்திராஷ்டமம் என்பர். (அஷ்டமம்
என்றால் எட்டு என்பது பொருள்) இவ்வாறு சஞ்சாரம் செய்யும் நாட்களில் சோதனையும்
வேதனையும் நிரைந்திருக்கும். மனத்தில் இனந்தெரியாத பயம் கவலை குடிகொள்ளும்.
எதிலும் நாட்டம் செல்லாது, நல்லவர்களைக்கூட பகைவராகவே கருதத் தோன்றும், எதிலும்
தயக்கம், தடை இருக்கும். இத்தகைய நாட்களில் புதிய முயற்சியில் ஈடுபடாது இருப்பது
நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, இதய துடிப்பு கூட அதிகமாக
துடிக்கும் மிகவும் கவனமகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் வீண்பழி,
வீண்வம்பு, திடிரென வந்து சேரும், நாம் செய்யும் செயல், பேசும் பேச்சு சண்டையில்
வந்து முடியும் பிரயாணங்கள் செய்யக்கூடாது, வீடு, மனை கட்டடம், பொன், பொருள், பூஷணம், வாங்கக்கூடாது, திருமணம், கிரகப்பிரவேசம், புதிதாக வேளையில் சேர, வியாபாரம் தொடங்க போன்றவற்றையும் கூடிய மட்டும் தள்ளிப் போடவேண்டும்.