சந்திரமங்களயோகம்
செவ்வாயும், சந்திரனும் சேர்ந்து லக்னத்தில் லக்கன
கேந்திரத்தில் இருப்பதால் உண்டாகும் யோகம் ஆகும் மேலும் சந்திரன், செய்வாய்,
சேர்ந்து இருந்தாலோ அல்லது சம சப்தம பார்வையால் பார்த்து கொண்டாலோ அது
சந்திரமங்களயோகம் எனப்படும் இந்த யோகம் அரச யோகா வாழ்வை தரும்.
மேஷம், கடகம்,
விருச்சிகம், தனுசு,மகரம், மீனம் ஆகிய ராசிகள் லக்னமாகி சந்திரமங்கள யோகம் அங்கே
கிடைத்து இருக்குமானால் இந்த சந்திர மங்களயோகம் பெரிய அந்தஸ்தை சுக போகத்தைத் தரும்
இப்படிப்பட்டவர்கள் தாய், தந்தை, சகோதர, சகோதரிகட்கு மிகவும் உதவியாக இருப்பார்
மேலும் தனதுசமுதாயத்தில் முக்கியமானபுள்ளியாகவும் விளங்குவார்கள் ஆனாலும் எல்லாரும்
தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும்தனக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற
எண்ணமும் உள்ளவராக இருப்பார்கள் திடிரெனக் கோபம் வரும் வந்த வேகத்தில் குறைந்து
விடும் கோபம் வருவது செவ்வாயாலும் கோபம் குறைந்து நல்ல குணம்வருவது சந்திரனால்