நீசபங்க ராஜயோகம்
ஒரு கிரகம் நீசம் பெற்றாலும் அந்தக் கிரகம் நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் அமைந்திருந்தாலும் நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்ச கிரகம் இருந்தாலும், நீசம் பெற்ற கிரகம் ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை பெற்றோ, அம்ச சக்கரத்தில் ஆட்சி உச்சம் பெற்றோ இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது,
நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் முதலில் கெடுபலன்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.
நிச்சனை நிச்சன் பார்ப்பது. அதாவது நீச்சம் பெற்ற ஒரு கிரகத்தை மற்றொரு நீச்ச கிரகம் பார்த்தால், இரண்டு நீச்சகிரகங்களும் நீச்சபங்க ராஜயோகத்தை அடையும்.
ஒரு செயல் நீசம் பெற்று அதாவது பங்கம் பெற்று அதன் மூலம் கிடைக்க கூடிய யோகமே நீசபங்க ராஜயோகம்