மோடி ஜாதகம் ஒரு ஆய்வு : 6
மோடி ஜாதக
தகவல்கள் அனைத்தும் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை அதன்படி கணிக்கப்பட்ட
ஜாதகம் ஆய்வு உங்கள் பார்வைக்கு
ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் ஐந்து
வீடுகளில் அமையப்பெற்றால் அதற்கு பஞ்ச அனான யோகம் எனப்படும் இதன் பலன்கள்
ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, அடைந்தது வாழ்க்கையில் உயர்வு அடைவார்கள், தொடர் வெற்றி
வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்
இவருடைய
ஜாதகத்தில் ஒன்றாம் இடம், நான்காம் இடம், ஐந்தாம் இடம், பத்தாம் இடம் மற்றும்
பதினொன்றாம் இடம் என இந்த ஐந்து வீடுகளில் ஒன்பது கிரகங்கள் அமையப்பெற்று
பஞ்ச அனான யோகத்தை கொடுத்துள்ளது இந்த ஐந்து வீடுகளும், மிக யோகமான சூட்சும வீடுகள் ஆகும் அதனால்தான் இவரால் தொடர் வெற்றி வாய்ப்புகளை அடைந்துள்ளார்.
பொதுவாக ஜாதகத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும்
கேந்திர ஸ்தானம் மற்றும் திரி
கோண ஸ்தானங்களில் அமைய
பெற்றால் இந்த யோகத்திற்கு திரிகோண மகா
பாக்கிய யோகம், என்றும் கேந்திர மகா
பாக்கிய யோகம் என்றும் பெயர் இவை குபேர யோகத்தை உண்டு பண்ணும், உயர்குல வாழ்க்கையை
உருவாக்கிவிடும், ராஜ யோக வாழ்க்கையில் வாழ்வார்கள் அப்படி பெற்ற இரண்டு
மிகப்பெரிய பாக்கிய யோகத்தை பெற்றுள்ளார்
இவருடைய ஜாதகத்தில் பஞ்சமாதிபதி கேந்திரத்திலும்,
பாக்கியாதிபதி ஜென்மத்திலும், லக்கனாதிபதி மற்றும் ராசியாதிபதி ஜென்மத்தில்
யோகதிபதியோடு ஆட்சி பெற்று மிகுந்த வளிமை பெற்று அமைந்து உள்ளார்கள் இப்படி அமைந்த
ஜாதகன் மிகுந்த யோகவான், புத்திமான், மகா பாக்கியசாலி ஆவார்கள், தொடர் வெற்றியோடு
வாழ்ந்து கொண்டிருப்பார்கள்
குறிப்பு
நரேந்திரா மோடி அவர்களின் பிறந்த தேதி
மற்றும் நேரங்கள் வலைதளத்தில் எடுக்கப்பட்டவை, அந்த தகவல்களை வைத்துதான் ஜாதகம்
கணிக்கப்ட்டது, தகவல்கள் மாறுபட்டால் பலன்கள் மாறுபடும்
"பதிவுகளை திரும்ப திரும்ப
படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள்
ஏற்படும் என்பது உறுதி"