விருச்சிக ராசி அல்லது லக்கன பலன்கள்
தேள் சின்னம் கொண்ட விருச்சிக லக்கனத்தில் பிறந்தோனுக்கு நன்மை செய்யதக்க சந்திர
பகவான் திரிகோணத்தில் அமைவது நற்பலன்களை வாரி வழங்கும், நல்ல வீடு அமைதலும்,
தனலாபம் பல்கி பெறுதலும், ஆள், அடிமைகள் வாய்த்தலும், சீரிய பொன்னாபரன
சேர்கையும், அவனுக்குக் கிடைத்த இந்த
பூமியில் வெகுபுகழுடன் வாழ்வான், ஆனால் 1,4,7,10 ஆகிய கேந்திரஸ்தானத்தில் சந்திர பகவான் வீற்றிருப்பின்
இதற்கு நேர்மாறான பலன்களை அளிக்கும்.
இதற்கான ஜோதிட கவி
தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேரநன்று
அறிவித்தேன் அகம் பொருளும் அடிமைசெம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வான்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாகூத்தாலே
தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே
பதிவுகளை திரும்ப
திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள்
ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட
சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப
திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும்
திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள்
மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை