லக்கனதிற்கு இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம், நேத்திர ஸ்தானம் மற்றும் வாக்கு ஸ்தானம் என்பர் இந்த இடத்திலிருந்து ஜாதகருக்கு ஏற்படும் குடும்பம், மேன்மை, செல்வச்செழி ப்பு, பார்வை, வாக்கு, மற்றும் எந்த வகையில் ஜாதகருக்கு பணம் கிடைக்கும் போன்ற அம்சங்களை இந்த பாவம் கொண்டு தெரிந்து கொள்ளலாம் மேலும் எந்த மாதிரியான குடும்பம் அமையும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம், மரண சூட்சம ஸ்தானம் ஆகும் மிக முக்கிய ஸ்தானமான இந்த இடத்தில் முழு சுப கிரகமான குருபகவான் இந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பலன்களை செய்வார் எதிரியை கூட தன்வசம்படுத்தும் பேச்சாற்றல் திறன் உள்ளவரகா இருப்பார்கள், பொருளாதரத்தில் நல்ல மேன்மை உள்ளவர்களாக இருப்பார்கள், பண சிக்கல்கள் இருக்காது, எவ்வளவு வசதியாக இருந்தாலும் எளிமையாக காட்சி அளிப்பார்கள் அடக்கத்துடன் நடந்து கொள்வர் குறிப்பாக பிறர் மனம் புண்படாதபடி பேசக்கூடியவர்கள். எல்லோரிடத்திலும் பொதுவாக பெரியோர் முதல் சிறியவர் வரை பணிவு காட்டுவார் தன்னடக்கம் உள்ளவர் எந்த குலத்தில் பிறந்தாலும் பிராமின குணம் உடையவர் வேதம், சாஸ்திரம், நீதி நூல்களை விரும்பிப் படிப...