Posts

Showing posts from June, 2013

பலன்கள்

லக்னத்திற்கு ஏழாவது வீட்டில் சுக்கிரன் ,  செவ்வாய் இணைந்து இருந்தாலோ அல்லது சனி ,  செவ்வாய் இணைந்து இருந்தாலோ இதே கிரக சேர்க்கை இரண்டாமிடத்தில் இருந்தாலோ அந்த வாழ்க்கை   போராட்டமாகவே இருக்கும்   குறிப்பாக ஏழாவது   வீட்டில் செவ்வாய் இருந்து அவருடைய திசை நடக்கும் காலம் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை நிச்சயமாக   திசை மாறி செல்லும் என்பது   உண்மையாகும்    இந்தமாதிரியான ஜாதகன்களே நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் ஏறவேண்டிய நிலை   ஏற்படும்.

திருமணத் தடை

ராகு ஐந்தில் நின்றால் நாகதோஷம் எட்டில் செவ்வாய், சனி சேர்க்கை மாங்கல்யதோசம். ஏழில் சனி, ராகு, கேது, சூரியன், செய்வாய் கலத்திரதோசம் அல்லது மாங்கல்யதோசம் ஐந்தில் சனி, ராகு, கேது, செய்வாய் வாரிசு தோசம் உண்டு பன்னும் ஒரு ஜாதகத்தில்   செவ்வாய், சனி சேர்ந்து இருந்தாலும் அல்லது எந்த பாவத்தை பார்த்தாலும் திருமணத்தடை உண்டுபண்ணும் ஏழில் சனி, ராகு, கேது, சூரியன், செய்வாய் திருமணத் தடையை உண்டுபண்ணும், தசா  புத்தி பாதகமாக இருந்தால் பேசிமுடித்ததிருமணம்  கூட நின்றுவிடும் " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "

சனியால் ஏற்படும் பலன்கள்

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேல் சனி தசை, ஏழரைச்சனி, அட்டம்ச்சனி,கண்டச்சனி, அர்த்தாஷ்ட்டமச்சனி நடக்கும்மனால் விவசாயம் நஷ்டம், வைத்தியசெலவு, வருமானத்தடை, நிம்மதி இல்லாதநிலை, உறவினர்பகை, கடன்படுதல், அவமானமடைதல் போன்றபலன்கள் கன்டீப்பாக நடைபெறும். கடனிலிருந்து மீலுவதும், கடனாலியாவதும்  பூர்வஐென்மபுன்னியத்தை பொருத்து அமையும்

தர்மகர்மாதிபதி யோகம்

தர்மகர்மாதிபதி யோகம் உள்ள ஜாதகர் வாழ்க்கையில் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும் , எந்தவித பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து விடலாம்

பரிகாரம்

அட்டம ச்  சனி  நட ப் பவர்கள் , 19  மிளகை ஒ ரு  சிவ ப்பு   து ணி யி ல்  பொட்டல ம்  க ட்டி ,  ம ன் விளக்கில்  ( அக ல்  வி ள க் கி ல் )  நெய் நிரப்பி மிளகு பொட்டலத்தை நனைத்து தீபம் ஏற்றி காலபைரவர் சந்நிதியில் சனிக்கிழமைதோறும் வழிபடலாம்

தசாபலன்கள்

பொதுவாக சனி ,  ராகு -  கேது சம்பந்தப்பட்ட தசாபுத்தி நடந்தாலோ வாழ்க்கையில் போராட்டம் ,  வருமான தடை கடன் தொல்லை குடும்ப்பதில் அமைதி ஆனந்தக் குறைவு ஆகிய பலன்கள் நடக்கும் ஆண்டவனை நினைத்து கொண்டே இருங்கள் காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார் தொடர்ந்து,  திரும்ப திரும்ப பதிவுகளை பலமுறை படியுங்கள், தெய்வ ரகசியம் ஜோதிடசூட்சுமங்கள் அல்லல்களை நீக்கும் பரிகாரங்கள் பல்வேறு மூலமந்திரங்கள் சித்தர்களின் சூட்சுமங்கள், குருஅருள் திருஅருள் பெறுவதற்கான வழிமுறைகள் மேலும் பல்வேறுசூட்சும தத்துவங்கள் அடங்கியுள்ளன. சித்தர்களின் வரலாறு படியுங்கள் குரு கடாச்சியம் இருந்தால் தவறுகள் மன்னிக்க படலாம் , விதிகள் மாற்ற படலாம் சித்தர்களின் வரலாறு படிப்பதன் மூலம் பாவங்கள மன்னிக்க படலாம் பல அன்பர்கள் சித்தர்களின் வரலாறு பற்றி பல்வேறு வலைப்பூக்களில் அற்புதமாக பதிவு செய்துள்ளார்கள் தொடர்ந்து படியுங்கள்

ஞானசம்பந்தர்

“ வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே ”

ஈசன் செயல்

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்   வருடத்திற்கு   ஒரு முறையாவது நமது    பிறந்த நட்சதிரதன்று நம்   நட்சதிரதுக்குரிய ஸ்தலத்திற்கு    சென்று வழிபட்டால்    வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும்    நேரம், காலம் முட்டாளையும் அறிவாளியாக்கும், வீரனையும் கோழையாக்கும் குலதெய்வம் தெரியாதவர்கள் குழப்பம் அடையத்தேவை இல்லை, உங்கள் மனதைக் கவரும் எதாவது ஒரு  சித்தரின் ஜீவ சமாதிக்குச் சென்று அவரையே குருவாகவும் குலதெய்வமகவும் மனப்பூர்வமாக நம்பி வழிபடுங்கள், உங்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும் 

நேரம், காலம்

பரிகாரங்கள், மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள், பரிகார ஹோமங்கள் எல்லாம் பார்த்தவுடனே அல்லது படித்த உடனே அல்லது செய்த உடனே வேலை செய்யாது எல்லாவற்றிக்கும் ஒரு நேரம், காலம் உண்டு  ஒன்றை பெறவேண்டும் என்றால் வேறு எதாவது ஒன்றை இழக்கவேண்டும் என்பது விதி; எது செய்ய வேண்டும் என்றாலும் நேரம் காலம் பார்த்துதான் செய்ய வேண்டும், இவைகளை எப்போது, எப்படி செய்தால் நம் பிரச்சினைகள் தீரும் தொடர்பு கொள்ளுங்கள் விடை கிடைக்கும் அல்லது பதிவுகளை  திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி நேரம், காலம் முட்டாளையும் அறிவாளியாக்கும், வீரனையும் கோழையாக்கும் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "

ஏழரைச்சனி

ஏழரைச்சனி காலத்தில் எந்த முதலீடு செய்து எந்த தொழில் செய்தாலும் கடனாளியாக கூடும். ஒருவருக்கு ஏழரைச்சனியோ, அட்டமச்சனியோ, அர்த்தாஷ்டமசனியோ, கண்டச்சனியோ அல்லது சனி தசையோ சனி புத்தியோ நடந்தால் திருமணம் நட்டந்து விடும் என்பது அனுபவபூர்வமான உண்மை