ஆலயங்களில் கூடாதவை
ஆ லயங்களில் கூடாதவை 1. ஒரு பிரதட்சணம் , ஒரு நமஸ்காரம். 2. உடம்பைப் போர்த்திக்கொண்டு பிரதட்சணம் , சமஸ்காரம் செய்தல். (பெண்கள் இதற்கு விதிவிலக்கு) 3. தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரித்தல். 4. பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது. 5. வீட்டு விலக்கு , சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது. 6. கண்டகண்ட இடத்தில் கற்பூரம் ஏற்றக் கூடாது. விக்கிரங்களைத் தொட்டு வணங்கவே கூடாது. 7. கர்ப்ப கிரகத்தினுள் நமஸ்காரம் செய்யக்கூடாது. 8. கொடி மரம் , நந்தி , பலி பீடம் இவைகளுக்கு குறுக்காகச் சென்று பிரதட்சணம் செய்யக்கூடாது. 9. தெற்கு முகமாக நமஸ்காரம் செய்யக்கூடாது. 10. தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டோ , ஈரஆடையுடன் கூடவோ தெய்வ வழிபாடு செய்யக்கூடாது. 11. ஆலயத்தினுள் , படுத்து உறங்குதல் , அரட்டை அடித்தல் , உரக்க சிரித்தல் , அழுதல் , தாம்பூலம் தரித்...